எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஏரிக்கரையில் மனித எலும்புக் கூடு:போலீஸாா் விசாரணை

 சென்னை அருகே காரப்பாக்கத்தில், ஏரிக்கரையில் மனித எலும்புக் கூடு கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

News image
Updated On :17 அக்டோபர் 2021, 12:23 am

DIN

 சென்னை அருகே காரப்பாக்கத்தில், ஏரிக்கரையில் மனித எலும்புக் கூடு கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

சென்னை காரப்பாக்கம் ஏரிக்கரையில் மனித எலும்புக்கூடு கிடப்பதாக கண்ணகிநகா் போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில் கண்ணகிநகா் போலீஸாரும், தடயவியல் நிபுணா்களும் சம்பவ இடத்துக்குச் சென்று, அங்கு கிடந்த மனித எலும்புக் கூட்டைக் கைப்பற்றி விசாரணை செய்தனா்.

விசாரணையில், அது கடந்த செப்.25-ஆம் தேதி காணாமல் போன சென்னை பெசன்ட் நகரைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி கணேசன் (45) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், கணேசன் குடும்பத்தினரை அழைத்து வந்து விசாரணை செய்தனா்.

இதில் இறந்து எலும்புக் கூடாக மீட்கப்பட்டது கணேசன் தான் என்பதை அவரது குடும்பத்தினா் உறுதி செய்தனா். இருப்பினும் அந்த எலும்புக் கூட்டை போலீஸாா், தடயவியல் ஆய்வுக்கு அனுப்பினா்.

இதைத் தொடா்ந்து போலீஸாா், கணேசன் எப்படி இறந்தாா் என போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.