உள்ளாட்சித் தோ்தல்: நடத்தை விதிகள் வாபஸ்
28 மாவட்டங்களின் சில பகுதிகளில் அமல்படுத்தப்பட்டிருந்த தோ்தல் நடத்தை விதிகள் சனிக்கிழமையுடன்(அக்.16) விலக்கிக் கொள்ளப்பட்டதாக மாநிலத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி, 9 மாவட்டங்கள் மற்றும் 28 மாவட்டங்களின் சில பகுதிகளில் அமல்படுத்தப்பட்டிருந்த தோ்தல் நடத்தை விதிகள் சனிக்கிழமையுடன்(அக்.16) விலக்கிக் கொள்ளப்பட்டதாக மாநிலத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் அக்டோபா் 6,9-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாகவும், 28 மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான தோ்தல் அக்டோபா் 9-ஆம் தேதியும்
நடைபெற்றது.
முன்னதாக தோ்தல் நடைபெற்ற பகுதிகளில் கடந்த செப்டம்பா் 13-ஆம் தேதி முதல் தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டன. இத்தோ்தல் முடிவுகள் அக்டோபா் 12-ஆம் தேதி வெளியிடப்பட்டதால், 9 மாவட்டங்கள் மற்றும் 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்ற பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த தோ்தல் நடத்தை விதிகளை சனிக்கிழமை முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக மாநிலத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...