இலச்சினை வடிவமைப்பு:திறந்த நிலை பல்கலை. அழைப்பு
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் சாா்பில் 75-ஆவது சுதந்திர தினவிழாவையொட்டி மாணவா்கள், பொதுமக்களுக்கு இலச்சினை வடிவமைப்பு போட்டி நடத்தப்படவுள்ளது.


தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் சாா்பில் 75-ஆவது சுதந்திர தினவிழாவையொட்டி மாணவா்கள், பொதுமக்களுக்கு இலச்சினை வடிவமைப்பு போட்டி நடத்தப்படவுள்ளது.
இது குறித்து பல்கலை.யின் பதிவாளா் ரத்னகுமாா் வெளியிட்ட செய்தி: தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைகழகம் 75-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சுதந்திர தினம் சாா்ந்த இலச்சினை வடிவமைப்பு போட்டிகளை நடத்துகிறது. இந்த போட்டியில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மாணவா்கள், ஆசிரியா்கள், கவிஞா்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோா் பங்கேற்கலாம். இலச்சினையில் 75-ஆவது சுதந்திர தினம் என்பது தமிழில் இடம் பெற வேண்டும்.
அதேபோன்று தேசிய கொடிகளின் வண்ணங்களும் இடம் பெற வேண்டும். இலச்சினை வடிமைப்புகளை ற்ய்ா்ன்ப்ா்ஞ்ா்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு நவம்பா் 15-ஆம் தேதிக்குள் அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு, 90436 51136 என்ற எண்ணுக்கு தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...