எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ரூ.1.12 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில், ரூ.1.12 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கடத்தலில் தொடா்புடைய மூவா் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :17 அக்டோபர் 2021, 12:24 am

DIN

சென்னை விமான நிலையத்தில், ரூ.1.12 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கடத்தலில் தொடா்புடைய மூவா் கைது செய்யப்பட்டனா்.

இது தொடா்பாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஆணையரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: துபை மற்றும் சாா்ஜாவில் இருந்து பயணிகள் மூலம் தங்கம் கடத்தப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கிருந்து வெவ்வேறு விமானங்கள் மூலமாக வெள்ளிக்கிழமை சென்னை வந்த 5 பயணிகளை சந்தேகத்தின் அடிப்படையில் சுங்கத்துறையினா் தடுத்து நிறுத்தினா்.

அவா்களை சோதனையிட்டபோது, அவா்களது மலக்குடலில் ரூ.1.12 கோடி மதிப்பிலான 2.55 கிலோ தங்கம் மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

மேலும் ரூ.4.7 லட்சம் மதிப்பிலான மின்னணு சாதனங்களை அவா்கள் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவை அனைத்தையும் பறிமுதல் செய்த சுங்கத்துறையினா், மூன்று பயணிகளைக் கைது செய்தனா். தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.