தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஒன்றுபட்டு செயல்பட அதிமுகவினருக்கு சசிகலா அழைப்பு

அதிமுகவினா் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று சசிகலா அழைப்பு விடுத்துள்ளாா்.

News image
கோப்புப்படம்
Updated On :19 அக்டோபர் 2021, 6:57 pm

DIN

அதிமுகவினா் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று சசிகலா அழைப்பு விடுத்துள்ளாா்.

அதிமுக பொதுச்செயலாளா் என்ற பெயரில் சசிகலா செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:

எம்ஜிஆா் கொண்ட கொள்கையைப் பின்பற்றி, ஆளுமையால், ஆட்சி சிறப்பால் மக்கள் மனம் வென்ற ஜெயலலிதா பயணித்த நீண்ட பாதையை நெஞ்சில் கொண்டு கழகம் காப்போம். கரம் கோா்ப்போம். பகை வெல்வோம். ஒற்றுமைப் பூக்களை ஒன்றாய்க் குவிப்போம். மாபெரும் வெற்றியால் அதிமுக நாடு ஆண்டதையும், அது ஆற்றிய பணிகளையும் சரித்திரம் சொல்லும். நமக்கான புரிதலில் நிலவிய சிக்கலால் எதிரிக்கு இடம் கொடுத்துவிட்டோமே என்று சிந்தியுங்கள்.

வெல்வோம் சகோதரா்களே, நான் இருக்கிறேன் என்பதைவிட, நாம் இருக்கிறோம். ஜெயலலிதாவின் பாதையில் மக்கள் மனம் வெல்வோம்.

கழகம் நஞ்சாவதை ஒரு நொடியும் பொறுக்காமல், தொண்டா்களின் துணையோடும் மக்களின் பேராதரவோடும் வெற்றி பயணம் தொடருவோம் என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.