பயிர் காப்பீடு இரண்டு ஊராட்சிகள் புறக்கணிப்பு: விவசாயிகள் சாலை மறியல்

பெருகவாழ்ந்தான், தெற்கு நாணலூர் ஆகிய ஊராட்சியில் கடந்த ஆண்டு சம்பா பயிர் காப்பீடு திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக கூறி, அப்பகுதி விவசாயிகள் வெள்ளிக்கிழமை  சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
பெருகவாழ்ந்தானில் பயிர் காப்பீடு பட்டியலில் தங்கள் பகுதி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறி சாலை மறியலில் ஈடுப்பட்ட பெருகவாழ்ந்தான், தெற்கு நாணலூர் ஊராட்சி விவசாயிகள்.
பெருகவாழ்ந்தானில் பயிர் காப்பீடு பட்டியலில் தங்கள் பகுதி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறி சாலை மறியலில் ஈடுப்பட்ட பெருகவாழ்ந்தான், தெற்கு நாணலூர் ஊராட்சி விவசாயிகள்.


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள பெருகவாழ்ந்தான், தெற்கு நாணலூர் ஆகிய ஊராட்சியில் கடந்த ஆண்டு சம்பா பயிர் காப்பீடு திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக கூறி, அப்பகுதி விவசாயிகள் வெள்ளிக்கிழமை  சாலை மறியலில் ஈடுப்பட்டனர். 

காவிரி டெல்டா மாவட்டம் முழுவதும் 100 சதவீதம் பயிர்க் காப்பீடு இழப்பீடு வழங்கப்படும் என அறிவிப்பு செய்யப்படுட்டுள்ள நிலையில், பெருகவாழ்ந்தான் - 1 மற்றும் தெற்கு நாணலூர் ஆகிய இரண்டு வருவாய்க் கிராமங்கள் காப்பீடு பெறும் கிராமங்கள் பட்டியலில் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தொடர்ச்சியான கன மழையால் கடந்த ஆண்டு சம்பா பயிர் பதிக்கப்பட்ட நிலையில், தேசிய பேரிடர் நிவாரண நிதி வழங்கியது ஏன்?. 2020-2021-க்கான பயிர் காப்பீடு இரண்டு ஊராட்சிகளுக்கு வழங்கப்படாததை கண்டித்தும் . பயிர் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு தொகையை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் வழங்கிட வலியுறுத்தி 
பெருகவாழ்ந்தான், தெற்கு நாணலூர் ஊராட்சி விவசாயிகள் சார்பில், பெருக வாழ்ந்தான் பேருந்து நிலையம் அருகே, தெற்கு நாணலூர் அதிமுக ஊராட்சி செயலர் ராம்தாஸ் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த கோட்டூர் வட்டார வேளாண்மை இணை இயக்குநர் தங்கபாண்டியன், மறியலில் ஈடுப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி 15 தினங்களில் விடுப்பட்ட ஊராட்சிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com