தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

கம்பத்தில் தடையை மீறி நடைபயணம்: போலீஸ் குவிப்பால் போக்குவரத்து நெரிசல்

தேனி மாவட்டம், கம்பத்திலிருந்து பசும்பொன்னுக்கு தடையை மீறி நடைபயணம் காரணமாக, போலீஸ் குவிக்கப்பட்டதால் வெள்ளிக்கிழமை பரபரப்பும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

News image
கம்பத்தில் குவிக்கப்பட்டுள்ள போலீஸ்
Updated On :28 ஜனவரி 2024, 4:25 am

DIN

கம்பம்: தேனி மாவட்டம், கம்பத்திலிருந்து பசும்பொன்னுக்கு தடையை மீறி நடைபயணம் காரணமாக, போலீஸ் குவிக்கப்பட்டதால் வெள்ளிக்கிழமை பரபரப்பும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

தேனி மாவட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் பசும்பொன் பிரிவு சார்பில் தேவர் குருபூஜைக்கு வெள்ளிக்கிழமை கம்பத்திலிருந்து பசும்பொன்னுக்கு நடைபயணமாக செல்வதாக கட்சியினர் அறிவித்து இருந்தனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். 

இதனைத்தொடர்ந்து தடையை மீறி நடைபயணம் செல்ல உள்ளதாக அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் அறிவித்தனர். 

இந்த நிலையில் கம்பம் வடக்கு தெற்கு காவல் ஆய்வாளர்கள் புவனேஸ்வரி லாவண்யா தலைமையில் போலீசார் 50க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டனர்.

காலை நேரத்தில் போலீசார் குவிக்கப்பட்டதால் கம்பம் தேனி பிரதான சாலையில்  பரபரப்பும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.