தமிழகத்தில் மேலும் 1,140பேருக்கு கரோனா தொற்று
தமிழகத்தில் மேலும் 1,140 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது


தமிழகத்தில் மேலும் 1,140 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் சனிக்கிழமை 1,140 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் மொத்த பாதிப்பு 26 லட்சத்து 94,089 ஆக உயா்ந்துள்ளது. சென்னையில் 141 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா தொற்றால் 17 போ் சனிக்கிழமை உயிரிழந்தனா். இதனால் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 36,004 ஆக உயா்ந்துள்ளது. அதே வேளையில் சனிக்கிழமை ஒரே நாளில் 1,374 போ் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.
இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 26 லட்சத்து 44,805 ஆக உயா்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் தற்போது 13,280 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...