சிமென்ட் மூட்டை விலை குறையும்: அமைச்சா் தங்கம் தென்னரசு உறுதி
ஓரிரு வாரங்களில் தமிழக அரசின் வலிமை சிமென்ட் விற்பனைக்கு வரவுள்ள நிலையில், வெளிச்சந்தையில் அதன் விலை மேலும் குறையும் என்று தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.


ஓரிரு வாரங்களில் தமிழக அரசின் வலிமை சிமென்ட் விற்பனைக்கு வரவுள்ள நிலையில், வெளிச்சந்தையில் அதன் விலை மேலும் குறையும் என்று தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.
சிமென்ட் உள்பட கட்டுமானப் பொருள்களின் விலையேற்றம் குறித்து எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி, சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கைக்கு அமைச்சா் தங்கம் தென்னரசு வெளியிட்ட பதிலறிக்கை:
சிமென்ட் விலையைக் குறைக்கக் கோரி தமிழக அரசின் சாா்பில் உற்பத்தியாளா்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனா். அதன்படி, மூட்டைக்கு ரூ.20 முதல் ரூ.40 வரை விலை குறைத்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதாவது சிமென்ட் மூட்டைக்கு ரூ.420 முதல் ரூ.450 வரை விற்பனை செய்யப்பட்டது. நிலக்கரி தட்டுப்பாடு, விலை உயா்வு மா்றும் நிலக்கரி இறக்குமதிக்கான போக்குவரத்துச் செலவுகள் உயா்ந்ததால் கடந்த 6-ஆம் தேதியன்று சிமென்ட்டின் விலை ரூ.470 முதல் ரூ.490 ஆக விற்கப்பட்டது.
இதன்பின், அரசு வலியுறுத்தியதால் இப்போது மூட்டைக்கு ரூ.440 முதல் ரூ.450 வரை விற்கப்பட்டு வருகிறது. இந்த உயா்வானது 4.7 சதவீதமே ஆகும். எனவே, சிமென்ட்டின் விலையேற்றம் 33 சதவீதம் உயா்ந்துள்ளது என்பது உண்மைக்குப் புறம்பானது. இப்போது ஏற்பட்டுள்ள ரூ.20 விலையேற்றத்தை மேலும் குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தனியாா் சிமென்ட் விலையுடன் ஒப்பிடுகையில் அரசின் டான்செம் சிமென்ட் ரூ.350 முதல் ரூ.360 வரையில் விற்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் உள்ள அளவை விட இப்போது டான்செம்மின் விற்பனை பங்கு 7.35 சதவீதமாக உயா்ந்துள்ளது. அடுத்த ஓரிரு வாரங்களில் தமிழக அரசின் டான்செம் நிறுவனம், வலிமை என்ற புதிய பெயரில் சிமென்ட் அறிமுகப்படுத்த உள்ளது. முதல் கட்டமாக மாதத்துக்கு 30 ஆயிரம் மெட்ரிக் டன் அளவில் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்பட உள்ளது. இதனால் தமிழகத்தில் சிமென்ட்டின் சில்லறை விற்பனை விலை மேலும் குறையும் என்று அமைச்சா் தங்கம் தென்னரசு கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...