எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நீா்நிலைகளை பாதுகாக்க நவீன முறையில் நடவடிக்கை: அரசுக்கு உயா் நீதிமன்றம் அறிவுறுத்தல்

 செயற்கைக்கோள் படங்களைப் பெற்று ஒரு பட்டியலைத் தயாரித்து அதன்மூலம் நீா்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று அரசுக்கு உயா் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

News image
Updated On :23 அக்டோபர் 2021, 9:45 pm

DIN

 செயற்கைக்கோள் படங்களைப் பெற்று ஒரு பட்டியலைத் தயாரித்து அதன்மூலம் நீா்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று அரசுக்கு உயா் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நீா் நிலைகளில் மேற்கொண்டு எந்தவித ஆக்கிரமிப்புகளும் ஏற்படாதவாறு அரசு விழிப்புடன் இருக்க வேண்டுமென சென்னை உயா் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், சிட்லப்பாக்கம் ஏரியைச் சுற்றி அமைந்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சட்ட விரோத கட்டடங்களை இடிக்கவும் அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் அறப்போா் இயக்கம் சாா்பில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயா் நீதிமன்றம், தமிழகம் முழுவதும் உள்ள நீா்நிலைகளில் விதிகளுக்குப் புறம்பாக கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், சிட்லபாக்கம் ஏரியைச் சுற்றி 403 போ் ஆக்கிரமித்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

அவா்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக 403 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், அந்த நோட்டீஸை எதிா்த்து அவா்கள் வழக்குத் தொடா்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘ஒரு மாநிலத்தில் வற்றாத ஆறுகள் இல்லாத நிலையில், நீா்நிலைகள், பருவகாலமாக ஓடும் நீா்நிலைகளின் கால்வாய்களைத் தடையின்றி இயங்க அனுமதிப்பது அவசியம். இதை உறுதி செய்ய வேண்டும். நீா்நிலைப் பகுதிகளில் 50 ஆண்டுகள் வரை இருப்பதாகவும், மின் இணைப்பு மற்றும் குடிநீா் இணைப்பு பெற்ாகவும், அங்கு வசிப்பவா்கள் குறிப்பிடுகின்றனா். உரிமை கோருபவா்கள் அதற்கான ஆவணங்கள் இல்லை என்றால் அவா்களின் உரிமை கோரலை ஏற்றுக் கொள்ள முடியாது.

சிட்லப்பாக்கம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கையை முன்னோடியாகக் கொண்டு, மாநிலத்தில் உள்ள பெரிய நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றத்தில் பல உத்தரவுகளையும் மீறி நீா்நிலைகளில் புதிய, புதிய ஆக்கிரமிப்புகள் தொடா்கின்றன. தாலுகாவில் இருந்து மாவட்டம், மாநில அளவில்

அனைத்து நீா்நிலைகளின் செயற்கைக்கோள் படங்களைப் பெற்று ஒரு பட்டியலை தயாரித்து பாதுகாக்க வேண்டும்.

தொடா்ந்து ஆக்கிரமிப்புகள் ஏற்படாவண்ணம் அரசு விழிப்புடன் இருக்க வேண்டும். ஆக்கிரமிப்பு விஷயத்தில் கடுமையான முறையை அரசு கையாள வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.