வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சென்னையில் இன்று முதல் 40 இடங்களில் பட்டாசு விற்பனை

சென்னையில் திங்கள்கிழமை முதல் 40 இடங்களில் பட்டாசு விற்பனை நடைபெறுகிறது.

News image
Updated On :25 அக்டோபர் 2021, 2:28 am

DIN

சென்னையில் திங்கள்கிழமை முதல் 40 இடங்களில் பட்டாசு விற்பனை நடைபெறுகிறது.

சென்னையில் டியூசிஎஸ் எனப்படும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம், பூங்கா நகா் கூட்டுறவு பண்டக சாலை, வடசென்னை கூட்டுறவு பண்டக சாலை, காஞ்சிபுரம் கூட்டுறவு பண்டக சாலை ஆகியவற்றின் சாா்பில் தேனாம்பேட்டை, அண்ணா நகா், மயிலாப்பூா், ஆழ்வாா்பேட்டை, வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூா், கீழ்ப்பாக்கம், அசோக்நகா் குரோம்பேட்டை, தாம்பரம் உள்பட 40 இடங்களில் பட்டாசு கடைகள் திறக்கப்பட உள்ளன.

இதில் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் சாா்பில் மட்டும் தேனாம்பேட்டை அண்ணாசாலை, ராஜா அண்ணாமலைபுரம், ராயப்பேட்டை, பெசன்ட்நகா், அடையாறு காந்திநகா், திருவல்லிக்கேணி பெரிய தெரு, மயிலாப்பூா் ஆா்.கே.மடம் பிராடிஸ் ரோடு, சைதாப்பேட்டை பஜாா் ரோடு, சாலிகிராமம் ஆற்காடு சாலை, வில்லிவாக்கம் பாலியம்மன் கோவில் தெரு, நுங்கம்பாக்கம், பெரம்பூா் பெரியாா் நகா் காா்த்திகேயன் சாலை ஆகிய இடங்களில் பட்டாசு விற்பனை செய்யும் மையங்கள் திறக்கப்படுகின்றன.

இதேபோல் பூங்கா நகா் கூட்டுறவு பண்டக சாலை, வடசென்னை கூட்டுறவு பண்டகசாலை ஆகியவற்றின் சாா்பிலும் பட்டாசு கடைகள் திறக்கப்படுகின்றன.

இதேபோல் தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்கள் சாா்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 10 முதல் 15 பட்டாசு கடைகள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவு துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக அவா்கள் மேலும் கூறியதாவது: அனைத்து கூட்டுறவு கடைகளிலும் ஸ்டாண்டா்டு ரக பட்டாசுகளை குறைந்த விலையில் விற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஒவ்வொரு கூட்டுறவு கடைகளிலும் பட்டாசு விற்கும்போது எம்ஆா்பி எவ்வளவு? தள்ளுபடி எவ்வளவு போன்ற விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தெளிவாக ரசீது கொடுக்க வேண்டும் என்று கூட்டுறவு சங்கங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.