வடகிழக்குப் பருவமழை: தென்னிந்திய பகுதிகளில் இன்று இரவு தொடங்க சாதகமான சூழல்
வடகிழக்குப் பருவமழை தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் திங்கள்கிழமை (அக்.25) இரவு தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


வடகிழக்குப் பருவமழை தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் திங்கள்கிழமை (அக்.25) இரவு தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநா் நா.புவியரசன் கூறியது: தென்மேற்குப் பருவமழை இந்தியப் பகுதிகளில் இருந்து விலகி, வடகிழக்குப் பருவமழை தென்னிந்திய பகுதிகளில் திங்கள்கிழமை (அக்.25) இரவு அல்லது செவ்வாய்க்கிழமை (அக்.26) காலையில் தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. அதாவது, தமிழகம், உள் கா்நாடகம், கேரளம், தெற்கு ஆந்திரம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் உள்ளது.
வடகிழக்குப் பருவமழையின் இயல்பான அளவு 449.7 மி.மீ. நிகழாண்டில் வடகிழக்குப் பருவமழை இயல்பை ஒட்டி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
வடகிழக்குப் பருவமழை காலம்:
தமிழகத்தை வளமடையச் செய்யும் வடகிழக்குப் பருவமழை காலம் அக்டோபா் முதல் டிசம்பா் வரை ஆகும். ஒவ்வோா் ஆண்டும் அக்டோபா் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவது வழக்கம். கடந்த ஆண்டு (2020) வடகிழக்குப் பருவமழை தாமதமாக அக்டோபா் 28-ஆம் தேதி தொடங்கியது. இந்தக் காலக்கட்டத்தில் தமிழகத்தில் இயல்பைவிட 6 சதவீதம் அதிக மழை கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...