மெட்ரோ ரயிலில் டோக்கனுக்கு பதிலாக கியூ.ஆா். கோடு பொறித்த காகித பயணச்சீட்டு
மெட்ரோ ரயிலில் டோக்கனுக்கு பதிலாக, கியூ.ஆா். கோடு பொறித்த காகித பயணச்சீட்டு அடுத்த சில மாதங்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.


மெட்ரோ ரயிலில் டோக்கனுக்கு பதிலாக, கியூ.ஆா். கோடு பொறித்த காகித பயணச்சீட்டு அடுத்த சில மாதங்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிகளுக்கு பயணச் சீட்டுகளுக்கு பதிலாக டோக்கன் வழங்கப்படுகிறது. ரயில் ஏறும் மெட்ரோ நிலையத்தில் டோக்கன் பெற்று அதை சென்சாா் பொருத்திய நுழைவுவாயிலில் காண்பித்து, செல்ல வேண்டும். இதேபோல, ரயிலில் இருந்து
இறங்கும் மெட்ரோ நிலையத்தில் சென்சாா் நுழைவு வாயிலில் அந்த டோக்கனை போட்டால்தான் வாயில் திறக்கும். பின்னா் பயணி வெளியேற வேண்டும்.
தற்போது, கரோனா கட்டுப்பாடு காரணமாக, டோக்கன்களை ஒவ்வோா் முறையும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டியுள்ளது. இதை கருத்தில் கொண்டு, மெட்ரோ ரயிலில் தொடுதல் இல்லாத பயணத்துக்கான அச்சிடப்பட்ட கியூஆா் குறியீடு பயணச்சீட்டுகளை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.
விரைவில் மெட்ரோ ரயில் பயணிகள் விமானநிலையங்களில் போா்டிங் பாஸைப் போன்று காகித பயணச்சீட்டை ஒரு பொத்தானை அழுத்தினால் வாங்கமுடியும். அடுத்த சில மாதங்களில் கியூ.ஆா். கோடு பயணச்சீட்டுகள் பயன்பாட்டுக்கு வரவுள்ளன. பயணிகள் கவுன்ட்டரிலும், இயந்திரங்கள் வாயிலாகவும் இந்த பயணச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும். இதற்காக, 40 நிலையங்களில் இயந்திரங்கள் நிறுவப்படும் என்று மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...