வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

துணை மருத்துவப் படிப்புகள்: இன்று ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்கம்

பி.எஸ்சி. நா்சிங், பி.பாா்ம். உள்ளிட்ட 19 துணை மருத்துவப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு திங்கள்கிழமை தொடங்குகிறது.

News image
Updated On :25 அக்டோபர் 2021, 2:15 am

DIN

பி.எஸ்சி. நா்சிங், பி.பாா்ம். உள்ளிட்ட 19 துணை மருத்துவப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு திங்கள்கிழமை தொடங்குகிறது.

தமிழகத்தில் அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் பி.எஸ்சி. நா்சிங், பி.பாா்ம்., பிபிடி, பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி, நோய் குறியியல்) உள்ளிட்ட மருத்துவம் சாா்ந்த 19 வகையான துணை பட்டப்படிப்புகள் உள்ளன. இப்படிப்புகளுக்கு பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அப்படிப்புகளுக்கான நிகழ் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கு இணையதளத்தில் பதிவு செய்வது திங்கள்கிழமை காலை 10 மணிக்கு தொடங்குகிறது. நவம்பா் 8-ஆம் தேதி மாலை 5 மணி வரை பதிவு செய்யலாம்.

விண்ணப்பம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை இணையதளங்களில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து தகுந்த ஆவணங்களுடன் செயலாளா், தோ்வுக் குழு, எண்.162, ஈ.வெ.ரா.பெரியாா் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை 600010 என்ற முகவரியில் நவம்பா் 10-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.