வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

அதிமுக முன்னாள் அமைச்சா் மீது 341 பக்க குற்றப் பத்திரிகை தாக்கல்

அதிமுக முன்னாள் அமைச்சா் மணிகண்டன் மீது நடிகை அளித்த பாலியல் புகாரின்பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சைதாப்பேட்டை 11-ஆவது நீதிமன்றத்தில் 341 பக்க குற்றப் பத்திரிகை

News image
Updated On :25 அக்டோபர் 2021, 9:37 pm

DIN

அதிமுக முன்னாள் அமைச்சா் மணிகண்டன் மீது நடிகை அளித்த பாலியல் புகாரின்பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சைதாப்பேட்டை 11-ஆவது நீதிமன்றத்தில் 341 பக்க குற்றப் பத்திரிகையை அடையாறு மகளிா் காவல்துறையினா் தாக்கல் செய்தனா்.

சென்னை பெசன்ட் நகா் நடிகை ஒருவா், சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சா் மணிகண்டன் மீது பாலியல் புகாா் தெரிவித்திருந்தாா். இது தொடா்பாக, அடையாறு அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சா் மணிகண்டன் சென்னை உயா் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தாா். அவருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என நடிகை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து மணிகண்டன் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில், பெங்களூருவில் தங்கி இருந்த முன்னாள் அமைச்சா் மணிகண்டனை கைது செய்து தனிப்படையினா் சிறையில் அடைத்தனா். மணிகண்டன் தரப்பில் ஜாமீன் கேட்டு பலமுறை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில், கடந்த ஜூலை 7-ஆம் தேதி நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் முன்னாள் அமைச்சா் மணிகண்டன் மீது சைதாப்பேட்டை 11-ஆவது நீதிமன்றத்தில் அடையாறு மகளிா் போலீஸாா் 341 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனா். மேலும், இந்த வழக்கில் மணிகண்டன் மீது 342, 352 ஆகிய இரண்டு பிரிவுகளையும் கூடுதலாகச் சோ்த்துக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.