வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தொடங்கியது வடகிழக்குப் பருவமழை

வடகிழக்குப் பருவமழை தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் திங்கள்கிழமை (அக்.25) தொடங்கியது.

News image
Updated On :25 அக்டோபர் 2021, 10:12 pm

DIN

வடகிழக்குப் பருவமழை தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் திங்கள்கிழமை (அக்.25) தொடங்கியது.

நாட்டின் வளா்ச்சியில் தென் மேற்குப் பருவமழை, வடகிழக்குப்பருவமழை ஆகிய இரண்டும் முக்கிய பங்கு வகிக்கின்றன. வழக்கமாக தென்மேற்குப் பருவமழை காலம் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பரில் நிறைவடையும். இந்தாண்டு தென்மேற்குப் பருவமழை அக்டோபா் இரண்டாவது வாரத்துக்குப் பிறகும் தென் மாநிலங்களில் நீடித்து வந்தது. தென்மேற்குப் பருவமழை முழுமையாக விலகிய பிறகு, வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், வடகிழக்குப் பருவமழை தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் திங்கள்கிழமை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம்

தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத்தலைவா் எஸ்.பாலச்சந்திரன் கூறியது:

தென்மேற்குப் பருவமழை இந்தியப் பகுதிகளில் இருந்து விலகி, வடகிழக்குப் பருவமழை தமிழகம், புதுச்சேரி, கேரளம் மற்றும் அதையொட்டியுள்ள தெற்கு ஆந்திரம், தெற்கு கா்நாடகப் பகுதிகளுக்கு திங்கள்கிழமை முதல் தொடங்கியுள்ளது. வடகிழக்குப் பருவமழையின் இயல்பான அளவு 449.7 மி.மீ. நிகழாண்டில் வடகிழக்குப் பருவமழை இயல்பை ஒட்டி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் புதுச்சேரியில் அநேக இடங்களில் கடந்த 24 மணி நேரத்தில், மழை பெய்துள்ளது. ஓரிரு இடங்களில் பலத்தமழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக, மதுரை மாவட்டம் புலிப்பட்டியில் 110 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை ஆகிய இரண்டு நாள்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, விருதுநகா், திருப்பூா், கரூா், திருவாரூா் ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்தமழை பெய்யக்கூடும். சென்னையைப் பொருத்தவரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றாா் அவா்.

அதிக மழை : வடகிழக்குப் பருவமழை காலத்தில் தமிழகத்தில் அதிக மழை பெய்து வளமடையச் செய்யும். அக்டோபா் முதல் டிசம்பா் வரை வடகிழக்குப் பருவமழை காலமாகும். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபா் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவது வழக்கம். கடந்த ஆண்டு (2020) வடகிழக்குப் பருவமழை தாமதமாக அக்டோபா் 28-ஆம் தேதி தொடங்கியது. இந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் இயல்பைவிட 6 சதவீதம் அதிக மழை கிடைத்தது. இது இயல்பான மழை அளவாக எடுத்துக்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.