பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சேத்துப்பட்டு கொலை வழக்கில் 7 பேர் கைது

சேத்துப்பட்டு பகுதியில் முன்விரோதம் காரணமாக நடந்த கொலை வழக்கில் 7 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News image
சேத்துப்பட்டு கொலை வழக்கில் 7 பேர் கைது
Updated On :28 அக்டோபர் 2021, 10:34 am

DIN

சேத்துப்பட்டு பகுதியில் முன்விரோதம் காரணமாக நடந்த கொலை வழக்கில் 7 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை, சேத்துப்பட்டைச் சேர்ந்த கார் ஓட்டுநர் இளங்கோவன், கடந்த 25ஆம் தேதி இரவு சேத்துப்பட்டு, மேயர் சிட்டி பாபு தெரு, கிளப் ரோடு சந்திப்பு அருகே அவரது நண்பர் ஜெயவேல் என்பவருடன் பேசிக் கொண்டிருந்த போது, அங்கு இருசக்கர வாகனங்களில் வந்த 8 பேர் கும்பல் இளங்கோவனை சரமாரியாக கத்தியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். தாக்குதலில் பலத்த காயமடைந்த இளங்கோவன் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

இது குறித்து இளங்கோவனின் நண்பர் ஜெயவேல் சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.

சேத்துப்பட்டு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சஞ்சய்பிரபு, ராகேஷ்குமார், டேனியல்ராஜ், ஆகாஷ், விஜய்,  மூர்த்தி, தமிழ்செல்வன் ஆகிய 7 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 கத்திகள், 1 அரிவாள் மற்றும் 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் கொலையுண்ட இளங்கோவன் என்பவருக்கும், குற்றவாளி சஞ்சய் பிரபு என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இளங்கோவன், சஞ்சய் பிரபுவை அவதூறாக பேசியுள்ளார். 

இதன் காரணமாக சஞ்சய்பிரபு தனது நண்பர்களுடன் சேர்ந்து இளங்கோவனை கொலை செய்துள்ளது தெரியவந்தது. மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாகயுள்ள நரேஷ் என்பவரை தனிப்படை காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 7 நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.