தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பழைய மகாபலிபுரம் சாலையில் 5 பாலங்களை விரைந்து அமைக்க வேண்டும்: அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தல்

பழைய மகாபலிபுரம் சாலையில் 5 பாலங்களை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தினாா்.

News image
Updated On :30 அக்டோபர் 2021, 11:38 pm

DIN

பழைய மகாபலிபுரம் சாலையில் 5 பாலங்களை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தினாா்.

துறையின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் அவா், சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்தக் கூட்டத்தில் அமைச்சா் எ.வ.வேலு பேசியது:-

கேளம்பாக்கம், திருப்போரூா் புறவழிச்சாலை அமைக்கும் பணி, ராஜீவ் காந்தி சாலையில் உள்ள சுங்கச்சாவடி கட்டுமானங்களை நீக்க நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். பழைய மகாபலிபுரம் சாலையில் 5 பாலங்களை விரைந்து அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எண்ணூா், தச்சூா், தாமரைப்பாக்கம், திருவள்ளூா், ஸ்ரீபெரும்புதூா், சிங்கப்பெருமாள் கோவில், மகாபலிபுரம் வரை செல்லும் சென்னை எல்லை சாலைப் பணிகள் விரைவில் தொடங்கிட வேண்டும் என்றாா்.

ஆய்வுக் கூட்டத்தில், நெடுஞ்சாலைத் துறை முதன்மைச் செயலாளா் தீரஜ்குமாா் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.