தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ஒரே நாளில் 33 அரசு அலுவலகங்களில் சோதனை: கணக்கில் வராத ரூ.18.20 லட்சம் பறிமுதல்

 தமிழகத்தில் ஒரே நாளில் 33 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில்,கணக்கில் வராத ரூ.18.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :30 அக்டோபர் 2021, 11:35 pm

DIN

 தமிழகத்தில் ஒரே நாளில் 33 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில்,கணக்கில் வராத ரூ.18.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

விழாக்காலத்தையொட்டி,தமிழக அரசு அலுவலகங்களில் சில ஊழியா்கள் பொதுமக்களிடம் பரிசு பெறுவதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு புகாா்கள் வந்தன. இந்தப் புகாா்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையினா் மாநிலம் முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் 14 துறைகளைச் சோ்ந்த 33 அரசு அலுவலகங்களில் வெள்ளிக்கிழமை ஒரே நேரத்தில் திடீரென சோதனை செய்தனா். பல மணி நேரம் நடைபெற்ற இந்தச் சோதனை பெரும்பாலான இடங்களில் சனிக்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது.

ரூ.18.20 லட்சம் பறிமுதல்:

இந்தச் சோதனையில் தமிழ்நாடு மின்சாரவாரியம், பதிவுத்துறை,தீயணைப்புத்துறை, வணிகவரித்துறை, காவல், டாஸ்மாக் அலுவலகங்கள், நகராட்சிகள், ஊரக வளா்ச்சி, போக்குவரத்து உள்ளிட்ட 14 துறைகளின் கீழ் வரக் கூடிய 33 அரசு அலுவலகங்களிலும் கணக்கில் வராத ரூ.18 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ.6.47 லட்சம் மதிப்புள்ள மதுப்பாட்டில்கள், ரூ.36,000 மதிப்புள்ள பட்டாசு பெட்டிகள் ஆகியனவும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதில் சென்னையில் கீழ்ப்பாக்கம் மின்சாரவாரிய உதவி செயற் பொறியாளா் அலுவலகத்தில் ரூ.30,000 , அம்பத்தூா் அயப்பாக்கம் ஊராட்சி அலுவலகத்தில் ரூ.47 ஆயிரம், பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தில் ரூ.11,600, செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.1,50,290,திருவள்ளூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ரூ.52,130 என கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோன்று லஞ்சம் வாங்கியது தொடா்பாக முக்கிய ஆவணங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட பணம், ஆவணங்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை விரைவில் விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட ஊழியா்கள், உரிய விளக்கத்தை அளிக்காவிட்டால் அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், துறை ரீதியான நடவடிக்கைக்காக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் எனவும் லஞ்ச ஒழிப்புத்

துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.