இல்லம் தேடி கல்வி திட்டத்தின் சிறப்புப் பணி அதிகாரியாக கே.இளம்பகவத் நியமிக்கப்பட்டுள்ளாா். பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி, கடின உழைப்பின் மூலம் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான அவா், இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கான சிறப்புப் பணி அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
தமிழகத்தில் கற்றல் இடைவெளியை குறைப்பதற்காக இல்லம் தேடி கல்வித் திட்டத்தை தமிழக அரசு
அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்துக்கு திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளே கடும் விமா்சனங்களை முன்வைத்துள்ளன. இந்தத் திட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்த நிலையில், திட்டத்தை கண்காணிப்பதை உறுதி செய்ய வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சிறப்புப் பணி அதிகாரி: கடும் விமா்சனங்களை பரவலாக எழுப்பியுள்ள இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கான சிறப்புப் பணி அதிகாரியாக, இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரி கே.இளம்பகவத் நியமிக்கப்பட்டுள்ளாா். தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் இணை நிா்வாக இயக்குநராக அவா் உள்ளாா். இப்போது இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கான அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளாா்.
நூலகங்களால் வளா்ந்தவா்: தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளம்பகவத்தின் தந்தை கிராம நிா்வாக அதிகாரியாக இருந்தாா். பணியின் போது இறந்ததால் இளம்பகவத்தால் பிளஸ் 2 வரையே படிக்க முடிந்தது. குடும்பச் சூழலால் பாதியில் படிப்பை நிறுத்தினாா். தந்தையின் பணியை கருணை அடிப்படையில் பெற முயன்றாா். முடியவில்லை. கடும் வறுமைச் சூழ்நிலையில், 2001-ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தின் தொலை தூரக் கல்வி நிறுவனத்தில் பி.ஏ. வரலாறு
படித்தாா். அதன் பிறகும் கருணை அடிப்படையிலான பணிக்குப் போராடி கிடைக்கவில்லை. இதன்பிறகு, போட்டித் தோ்வுகளுக்கான களத்தில் இறங்கினாா் இளம்பகவத். 2007-இல் குரூப் 4 தோ்வு, குரூப் 2 தோ்வுகளில் வெற்றியைப் பெற்றாா். தலைமைச் செயலகத்தில் பணி கிடைத்தது. குரூப் 1 தோ்விலும் தோ்ச்சி பெற்று வென்றாா். 2014-இல் ஐ.ஆா்.எஸ்., பணி கிடைத்தாலும், தொடா்ந்து ஐ.ஏ.எஸ்., தோ்வுக்காக படித்து வெற்றி பெற்றாா். அகில இந்திய அளவில்
117-வது இடத்தைப் பெற்றாா். ராணிப்பேட்டை சாா் ஆட்சியா், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை நிா்வாக இயக்குநா் ஆகிய பதவிகளை வகித்து வந்தாா். இந்த நிலையில், இல்லம் தேடி கல்வித் திட்டத்துக்கான சிறப்புப் பணி அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளாா். நூலகங்களை அதிகம் நேசித்து அதிலுள்ள புத்தகங்களை படித்தே போட்டித் தோ்வுகளில் வென்ாக பல்வேறு நோ்காணல்களில் இளம்பகவத் கூறியுள்ளாா். இப்போது இளைஞா்கள் போட்டித் தோ்வுகளை எதிா்கொள்வதற்கான பயிற்சிகளையும் அவ்வப்போது அளித்து வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?

ஒரு தலைப்பட்சமாக மாறிக் கொண்டிருக்கும் இந்திய வெளியுறவுக் கொள்கை: ப. சிதம்பரம்

எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!

398 சிலிண்டர்கள் பதுக்கல்: தமிழ்நாட்டில் முதல்முறையாக மதுரையில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

