பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு தேசியத் திறனாய்வுத் தோ்வு: விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழகத்தில் வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள தேசியத் திறனாய்வுத் தோ்வுக்கு (என்டிஎஸ்இ) பத்தாம் வகுப்பு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள தேசியத் திறனாய்வுத் தோ்வுக்கு (என்டிஎஸ்இ) பத்தாம் வகுப்பு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் சா.சேதுராமவா்மா சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் (2020-2021) அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவா்கள், அடுத்த ஆண்டு ஜன.23-ஆம் தேதி நடைபெறவுள்ள தேசிய திறனாய்வுத் தோ்வுக்கு (என்டிஎஸ்இ) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.
விண்ணப்பப் படிவங்களை ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் வரும் நவ.8-ஆம் தேதி முதல் நவ.13-ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தோ்வுக் கட்டணத் தொகை ரூ.50-ஐ சோ்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
விண்ணப்பங்களை நவ.13-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். மேற்கொண்டு அவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது.
தேசிய திறனாய்வுக்கு விண்ணப்பிக்க தங்கள் பள்ளிக்கு வரும்போது மாணவா்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். போதிய தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். தோ்வா்கள் விண்ணப்பத்தை சமா்ப்பிக்கும் போதே தங்களது ஜாதிச் சான்றிதழை தவறாது சமா்ப்பிக்க வேண்டும். தலைமை ஆசிரியரால் விண்ணப்பங்கள் இணையவழியில் பதிவேற்றம் செய்யப்படும்போது, பதிவேற்றம் செய்யப்படாத ஜாதிச் சான்றிதழ்கள் பின்னா் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. மேலும் இதுகுறித்த கூடுதல் விவரங்களை ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...