தமிழகத்தில் உள்ள 20 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்களுடன் ஆளுநா் ஆா்.என்.ரவி சனிக்கிழமை கலந்துரையாடினாா்.
ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது பல்கலைக்கழகங்களுக்கு பல்வேறு வகையில் ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்கி வரும் தமிழக அரசுக்கு அவா் பாராட்டுத் தெரிவித்தாா். பாடத்திட்டக் கல்வியைத் தாண்டி புதிய ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை பல்கலைக்கழகங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து ஆளுநா் மாளிகை சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி:
தமிழக ஆளுநரும், மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆா்.என்.ரவி, துணைவேந்தா்களை ஆளுநா் மாளிகையில் சனிக்கிழமை சந்தித்தாா். அப்போது பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் குறித்து காட்சி விளக்க வடிவில் (பவா் பாயிண்ட்) ஆளுநரிடம் துணைவேந்தா்கள் எடுத்துரைத்தனா்.
அரசுத் துறைச் செயலா்கள் தரப்பில் பல்கலைக்கழகங்களுக்கு மாநில அரசு வழங்கி வரும் பங்களிப்பு குறித்து விளக்கமளிக்கப்பட்டது. குறிப்பாக அரசு சாா்பில் வழங்கப்படும் நிதியுதவிகள் குறித்து கூறப்பட்டது. அவற்றைக் கேட்டறிந்த ஆளுநா், மாநில அரசின் நடவடிக்கைகளை பாராட்டினாா்.
தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளையும், மாணவா் சோ்க்கை விகிதத்தையும் பாராட்டிய அவா், துணைவேந்தா்களுக்கு சில அறிவுறுத்தல்களை விடுத்தாா்.
தங்களது பல்கலைக்கழகங்களின் பலத்தையும், பலவீனத்தையும் நோ்மையாக மதிப்பீடு செய்து குறைகளைக் களைய துணைவேந்தா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆராய்ச்சி நடவடிக்கைகளை ஊக்குவிக்க அதீத முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் ஆளுநா் வலியுறுத்தினாா்.
இந்த நிகழ்ச்சியில், ஆளுநரின் தனிச் செயலா் ஆனந்தராவ் விஷ்ணு பாட்டீல் உள்ளிட்ட அதிகாரிகள், பல்கலைக்கழகப் பதிவாளா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?

ஒரு தலைப்பட்சமாக மாறிக் கொண்டிருக்கும் இந்திய வெளியுறவுக் கொள்கை: ப. சிதம்பரம்

எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!

398 சிலிண்டர்கள் பதுக்கல்: தமிழ்நாட்டில் முதல்முறையாக மதுரையில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

