ரஜினியிடம் உடல் நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினியிடம் உடல் நலம் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் சென்று விசாரித்தார்.


சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினியிடம் உடல் நலம் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் சென்று விசாரித்தார்.
தாதா சாகேப் பால்கே விருது பெறுவதற்காக அண்மையில் தில்லிக்கு சென்ற ரஜினிகாந்த், கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்னை திரும்பினாா். போயஸ் தோட்டத்தில் உள்ள தனது வீட்டில் ஓய்வில் இருந்து வந்த அவருக்கு வியாழக்கிழமை இரவு திடீரென தலைசுற்றல், மயக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து, ஆழ்வாா்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். அங்கு ரஜினிகாந்துக்கு சிடி ஸ்கேன் மற்றும் எம்ஆா்ஐ ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், கழுத்துப் பகுதியில், மூளைக்குச் செல்லும் ரத்த நாளத்தில் (கேராடிட் ஆா்ட்டரி) அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டது.
இதையும் படிக்க- கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்
இதையடுத்து அதனை நீக்குவதற்கான சிகிச்சைகள் அவருக்கு மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினியிடம் உடல் நலம் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் சென்று விசாரித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...