சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் முக்கிய அறிவிப்புகள்

தமிழக சட்டப்பேரவையில் இன்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கை மீதான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

News image
Updated On :1 செப்டம்பர் 2021, 8:59 am

DIN


சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கை மீதான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் சார்பில் அமைச்சர் சு. முத்துசாமி 30 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் பொதுமக்கள் வாங்கத்தக்க விலையில் வீடுகள் வழங்கிடும் அரசின் முயற்சியை நிறைவேற்றும் வகையில், சுயநிதித் திட்டத்தின் கீழ் பாடிக்குப்பம் (155 அடுக்குமாடி குடியிருப்புகள்), அயனாவரம் (216 அடுக்குமாடி குடியிருப்புகள்), ஈரோடு (108 அடுக்குமாடி குடியிருப்புகள்) கட்டப்படும்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், பொருளாதாரத்தில் நலிவுற்ற மற்றும் குறைந்த வருவாய் / மத்திய வருவாய் பிரிவுகளில் வீடு வாங்குவோரின் பொருளாதார அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் தவணை முறை திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தும்.

கோயம்பேடு மொத்த விற்பனை வளாகத்தை ரூ.20 கோடி செலவில் மேம்படுத்த நடவடிக்கை.

பழைய மகாபலிபுரம் சாலையையும், கிழக்கு கடற்கரை சாலையையும் இணைக்க பக்கிங்காம் கால்வாய் மீது சுமார் ரூ.180 கோடி செலவில் உயர்மட்ட சுழற்சாலை வகை மேம்பாலம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.