கண்கலங்கிய ஓ. பன்னீர்செல்வம்: ஆறுதல் கூறிய சசிகலா 

முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான  ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மரணமடைந்த நிலையில், பெருங்குடி தனியார் மருத்துவமனைக்கு வருகை தந்த சசிகலா, அவருக்கு நேரில் ஆறுதல் கூறினார்.
கண் கலங்கிய ஓ. பன்னீர்செல்வம்: ஆறுதல் கூறிய சசிகலா
கண் கலங்கிய ஓ. பன்னீர்செல்வம்: ஆறுதல் கூறிய சசிகலா


சென்னை: முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான  ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மரணமடைந்த நிலையில், பெருங்குடி தனியார் மருத்துவமனைக்கு வருகை தந்த சசிகலா, அவருக்கு நேரில் ஆறுதல் கூறினார்.

தனியார் மருத்துவமனையிலிருந்த ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்த சசிகலா தனது ஆறுதலைக் கூறினார். மனைவி மறைவு குறித்து சசிகலாவிடம் கூறும்போது, கண்கலங்கிய ஓ. பன்னீர்செல்வத்தின் கையைப் பிடித்து சசிகலா ஆறுதல் கூறினார்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை மரணமடைந்தார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு விஜயலட்சுமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு சென்னையை அடுத்த பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை அவர் மாரடைப்பால் மரணமடைந்தார்.

அவரது உடலுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,  அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி, ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆறுதல் கூறினர்.

இந்த நிலையில், விஜயலட்சுமியின்  உடல் மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான தேனிக்குக் கொண்டு செல்லப்பட்டது.

முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் ஆறுதல் கூற மருத்துவமனைக்கு வந்து கொண்டிருப்பதால், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் உள்ளிட்டோர் தனியார் மருத்துவமனை அறையில் உள்ளனர். பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்த சசிகலா, மனைவி மறைவுக்கு ஆறுதல் கூறியபோது, அவரும் கண்கலங்கினார்.

தனது மனைவிக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு மற்றும் அதற்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சைகள் குறித்து சசிகலாவிடம், பன்னீர்செல்வம் விளக்கிக் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com