கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடு தர தாமதம்: மதுரை ஆட்சியரின் வாகனம் ஜப்தி
வீட்டுவசதி வாரியம் கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடு தர தாமதம் செய்ததால் மாவட்ட ஆட்சியரின் வாகனம் வெள்ளிக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.


மதுரை: வீட்டுவசதி வாரியம் கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடு தர தாமதம் செய்ததால் மாவட்ட ஆட்சியரின் வாகனம் வெள்ளிக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் வீட்டுவசதி வாரிய சார்பில் குடியிருப்புகள் கட்டுவதற்காக 1987 இல் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. வீட்டுவசதி வாரியம் சார்பில் அப்போதைய மதுரை வருவாய் கோட்டாட்சியர் நீலக்கல், நிலங்களை கையப்படுத்தும் பணிகளை மேற்கொண்டார்.
இதில் மாடக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 13 நபர்களிடம் 99 சென்ட் நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில் அதற்கு உரிய இழப்பீடு தொகையை கூடுதலாக வழங்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் ரூபாய் 8 லட்சத்து 70 ஆயிரம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் இத்தொகையை வழங்க வீட்டுவசதி வாரியம் தாமதம் செய்து வந்தது. இதையடுத்து நில உரிமையாளர்கள் தரப்பில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மேற்படி தொகையை தர தாமதம் செய்வதை அடுத்து மாவட்ட ஆட்சியரின் வாகனத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து நில உரிமையாளர்களின் வழக்குரைஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்சியர் பயன்படுத்தும் இன்னோவா காரின் முன்பகுதியில் ஜப்தி செய்யப்படுவதற்கான நீதிமன்ற உத்தரவை ஒட்டினர்.
இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக நில உரிமையாளர்களின் வழக்குரைஞர்களுடன், வருவாய்த் துறை அலுவலர்கள் பேச்சு நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...