6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

புதுச்சேரியில் ஒரு மாநிலங்களவை இடத்துக்கு தேர்தல் அறிவிப்பு

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் மாநிலங்களவையில் ஓய்வு பெறும் உறுப்பினரின் காலி பணியிடத்தை நிரப்புவதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
புதுச்சேரியில் ஒரு மாநிலங்களவை இடத்துக்கு தேர்தல் அறிவிப்பு
Updated On :9 செப்டம்பர் 2021, 7:56 am

DIN

புது தில்லி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் மாநிலங்களவையில் ஓய்வு பெறும் உறுப்பினரின் காலி பணியிடத்தை நிரப்புவதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் என்.கோகுலகிருஷ்ணன் 06.10.2021 அன்று ஓய்வு பெறுகிறார். இதனால் இந்த இடத்தை நிரப்புவதற்கான தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, அக்டோபர் 4-ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும். அன்று மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்படும். தேர்தலுக்கான அறிவிப்பு செப்டம்பர் 15 (புதன்கிழமை) அன்று வெளியிடப்படும். வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் செப்டம்பர் 22 (புதன்கிழமை).

வேட்புமனுக்கள் செப்டம்பர் 23 (வியாழக்கிழமை) அன்று பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி செப்டம்பர் 27 (திங்கட்கிழமை) ஆகும்.

கொவிட் நெறிமுறைகளைப் பின்பற்றி இந்தத் தேர்தலை நடத்தும்படி, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளின் போது கொவிட்-19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பான விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காக யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவரை நியமிக்குமாறு புதுச்சேரி அரசின் தலைமைச் செயலாளருக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.