கிருஷ்ணகிரியில் மீலாடி நபி விழாக்குழு சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா
கிருஷ்ணகிரி புதுப்பேட்டை மீலாடி நபி விழாக்குழு சார்பாக 12 வது ஆண்டாக மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.


கிருஷ்ணகிரி புதுப்பேட்டை மீலாடி நபி விழாக்குழு சார்பாக 12 வது ஆண்டாக மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி டான்சி வளாகத்தில் உள்ள வரசித்தி விநாயகர் கோயிலில் இஸ்லாமிய சகோதரர்கள் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் என்.அஸ்லம் தலைமையில் சிறப்பு பூஜை நடத்தி வழிப்பட்டனர்.
அன்னதானத்திற்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் பாஜகவின் மூத்த நிர்வாகி கோட்டீஸ்வரன் கலந்து கொண்டு இஸ்லாமிய சகோதரர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஷப்பீர், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் கராமத், ஜாமீர், தமிழக தர்கா பேரவை மாநில நிர்வாகி ஆசாத் காதிரி, யாஹியா, தர்கா அமான், ஆனந்த் ரியாஸ் பப்லு சாதிக் ரவி மற்றும் இஸ்லாமிய சகோதரர்கள் கலந்து கொண்டு மத ஒற்றுமையை வலியுறுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...