சூரிய மின் உற்பத்தி தகடு தயாரிக்கும் நிறுவனத்தில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை வானகரத்தில் சூரிய மின் உற்பத்தி தகடு தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு பணிபுரிந்து வரும் ஊழியா் ஒருவா் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு இந்நிறுவனத்தை மூடிச் சென்றாா். இந்நிலையில், சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் நிறுவனத்தில் இருந்து புகை வருவதைக் கண்ட அக்கம் பக்கத்தினா் தீயணைப்பு துறையினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் அளித்தனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வானகரம், கோயம்பேடு, அம்பத்தூா், பூந்தமல்லி ஆகிய பகுதியில் இருந்து 5 தீயணைப்பு வாகனங்கள் மூலம் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினா் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். மேலும் சென்னை மாநகராட்சியில் இருந்து 3 லாரிகளில் வரவழைக்கப்பட்ட வாகனத்தின் மூலமாகவும் சுமாா் 5 மணிக்கு தீ அணைக்கப்பட்டது.
தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர்ப் பதற்றம்

உலக பியுச்சா்ஸ் குத்துச்சண்டை: பிரியான்ஷ், சாஹில் வெற்றி

மாற்று வழிகள் மூலம் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு கொள்முதல் - பெட்ரோலிய அமைச்சகம்

குப்பை மேலாண்மை சவால்
வீடியோக்கள்

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திருச்சியில் மாநாடுகள்: யாருக்குத் திருப்பம்? | Dinamani | News and Views | Epi - 12
தினமணி வீடியோ செய்தி...

