இதுகுறித்து மருத்துவத் துறையைச் அதிகாரி ஒருவர் கூறுகையில், மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பூசி மையங்களுக்கு போதுமான எண்ணிக்கையில் தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை. மானாமதுரை வட்டாரத்திற்கு 2,200 தடுப்பூசிகளும் இளையான்குடி வட்டாரத்திற்கு 3,300 தடுப்பூசிகளும் மட்டுமே வழங்கப்பட்டது. இதுபோல் திருப்புவனம் ஒன்றியத்திற்கும் குறைவான எண்ணிக்கையிலேயே தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. இதனால் காலை 10 மணிக்கெல்லாம் அனைத்து முகாம்களிலும் பரவலாக தடுப்பூசிகள் தீர்ந்துவிட்டது. மேற்கண்ட பகுதிகளில் பகல் 12 மணிக்கு மேல் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்த தடுப்பூசி முகாம்கள் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக திறக்கப்படவில்லை. கூடுதல் எண்ணிக்கையில் தடுப்பூசி கொடுக்கப்பட்டிருந்தால் இப்பகுதிகளில் உள்ள தடுப்பூசி மையங்களுக்கு ஊசி போட வந்த பொதுமக்கள் அனைவருக்குமே கரோனா தடுப்பூசி செலுத்தி இருக்கலாம் என்றார்.