ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

மேட்டூர் அணையிலிருந்து காவிரி பாசனத்திற்காக 16,000 கனஅடி நீர் திறப்பு

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 16,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

News image
மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 12,000 கன அடி நீர் திறப்பு
Updated On :28 ஜனவரி 2024, 4:08 am

DIN


மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 16,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வந்ததால் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவுகடந்த 3ஆம் தேதி வினாடிக்கு 14,000 கன அடியிலிருந்து 5,000 கன அடியாக குறைக்கப்பட்டது.

டெல்டா மாவட்டங்களில் மழை தணிந்து பாசன தேவை அதிகரித்ததால் 11-ந்தேதி பகல் 1.00மணி முதல் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 12,000கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

இன்று மாலை 6 மணி முதல் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 16,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  

இன்று காலை மேட்டூர்அணையின் நீர்மட்டம் 76.09 அடியிலிருந்து 75.87 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10,529 கன அடியிலிருந்து 10,566கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 16,000கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 750கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 37.96 டி.எம்.சி.யாக உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.