நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஃபோர்டு நிறுவன விவகாரம்: முதல்வருக்கு ஓ.பி.எஸ். கோரிக்கை

மறைமலைநகரில் ஃபோர்டு நிறுவனம் தொடர்ந்து இயங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துளார்.

News image

ஓ.பன்னீர்செல்வம் / மு.க.ஸ்டாலின்

Updated On :14 செப்டம்பர் 2021, 6:34 am

DIN

மறைமலைநகரில் ஃபோர்டு நிறுவனம் தொடர்ந்து இயங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துளார்.

இந்தியாவில் கார் உற்பத்தியை நிறுத்துவதாகவும், சென்னை உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வரும் 2 கார் உற்பத்தி தொழிற்சாலைகளை மூடுவதாக ஃபோர்டு நிறுவனம் அறிவித்தது. 

இந்நிலையில் இது தொடர்பாக முதல்வருக்கு அறிக்கை மூலம் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார். 

அந்த கோரிக்கையில், மறைமலைநகரில் ஃபோர்டு நிறுவனம் தொடர்ந்து இயங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் முதல்வர் உடனடியாக தலையிட்டு இருதரப்பினரிடயே பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவை எட்ட வேண்டும்.

ஃபோர்டு நிறுவனம் தொடர்ந்து மறைமலைநகரில் இயங்கவும் தொழிலாளர் பணிபுரியவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.