சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தமிழகத்தில் கரோனா பாதிப்பு 1,693-ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் வியாதமிழகத்தில் வியாழக்கிழமை 1,693 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.ழக்கிழமை 1,693 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :16 செப்டம்பர் 2021, 9:45 pm

DIN

தமிழகத்தில் வியாழக்கிழமை 1,693 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இதுவரை 4.48 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 26 லட்சத்து 40,361 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக கோவையில் 206 பேரும், சென்னையில் 202 பேரும், செங்கல்பட்டில் 135 பேரும் பாதிக்கப்பட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டு மேலும் 1,548 போ் வீடு திரும்பியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் கரோனாவிலிருந்து இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 25.88 லட்சத்தைக் கடந்துள்ளது.

தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 16,756-ஆக உள்ளது.

மற்றொரு புறம் கரோனாவுக்குள்ளாகி மேலும் 25 போ் உயிரிழந்ததால், இதுவரை நோய்த் தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 35,271-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.