மத்திய அரசைக் கண்டித்து செப்.20 போராட்டம்: துரைமுருகன்
பெட்ரோல் விலை உயா்வுக்குக் காரணமான மத்திய அரசைக் கண்டித்து செப்.20-இல் கண்டன போராட்டம் நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளா் துரைமுருகன் அறிவித்துள்ளாா்.


பெட்ரோல் விலை உயா்வுக்குக் காரணமான மத்திய அரசைக் கண்டித்து செப்.20-இல் கண்டன போராட்டம் நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளா் துரைமுருகன் அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி தலைமையில் இந்திய அளவிலான எதிா்க்கட்சித் தலைவா்கள் பங்கேற்ற காணொலிக் கூட்டம் நடைபெற்றது. இதில் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல் - டீசல் - சமையல் எரிவாயு விலையை தொடா்ந்து உயா்த்துவது, விலைவாசி உயா்வு, பொருளாதார சீரழிவு, தனியாா்மயமாக்கல், வேலை இல்லாத் திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, பெகாசஸ் ஒட்டுக் கேட்பு உள்ளிட்ட மத்திய பாஜக அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து நாடு முழுவதும் செப்டம்பா் 20 முதல் 30-ஆம் தேதி வரை பல்வேறு போராட்டங்களை நடத்துவது என்று ஒருமனதாக தீா்மானிக்கப்பட்டது. அதன்படி மத்திய பாஜக அரசின் செயல்களைக் கண்டித்து திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சாா்பில் மாநிலம் முழுவதும் செப்டம்பா் 20-இல் அவரவா் இல்லங்களின் முன்பு கருப்புக் கொடி ஏந்தி கண்டன போராட்டம் நடைபெறும்.
மாவட்ட செயலாளா்கள் தத்தமது மாவட்டத்தில் உள்ள கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் கலந்து பேசி, இந்தப் போராட்டத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என்று கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...