தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சிவகாசி: படுத்துக்கொண்டே சாப்பிட்டதால் தொண்டையில் நிலக்கடலை சிக்கி கூர்க்கா சாவு

சிவகாசி அருகே வியாழக்கிழமை படுத்துக்கொண்டே நிலக்கடலை சாப்பிட்டபோது தொண்டையில் கடலை சிக்கியதில் மூச்சுத்திணறி கூர்க்கா உயிரிழந்தார்.

News image
Updated On :16 செப்டம்பர் 2021, 7:25 am

DIN

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வியாழக்கிழமை படுத்துக்கொண்டே நிலக்கடலை சாப்பிட்டபோது தொண்டையில் கடலை சிக்கியதில் மூச்சுத்திணறி கூர்க்கா உயிரிழந்தார்.

சிவகாசி வட்டம் விஸ்வநத்தம் ஊராட்சி காமராஜ் நகரில் ஒரு வாடகை வீட்டில் கரண்சிங்(35) என்பவர் வசித்துவந்தார். இவர் விஸ்வநத்தம் பகுதியில் கூர்க்கா பணியில் இருந்து வந்துள்ளார். 

இந்நிலையில் இவர் சம்பவத்தன்று படுத்துக்கொண்டே நிலக்கடலை சாப்பிட்டுள்ளார். அப்போது நிலக்கடலை எதிர்பாராதவிதமாக தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டது. 

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து அவரது உறவினர் அளித்த புகாரின் பேரில் சிவகாசி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.