விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார் பிறந்த நாள்: கடலூர் ஆட்சியர் மரியாதை

எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார் உருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் கி. பாலசுப்பிரமணியம் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

News image
எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் ஆட்சியர் கி. பாலசுப்பிரமணியம். அருகில் சட்டப் பேரவை உறுப்பினர் கோ. ஐயப்பன்.
Updated On :16 செப்டம்பர் 2021, 6:54 am

DIN


கடலூர்: எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார் உருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் கி. பாலசுப்பிரமணியம் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சமூகநீதிப் போராளியும் முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியாரின் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு கடலூர் மஞ்சக்குப்பத்தில் அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டது.

அவரது பிறந்த நாளினை முன்னிட்டு இன்று (வியாழக்கிழமை) அவரது உருவச் சிலைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் கி. பாலசுப்பிரமணியம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சட்டப் பேரவை உறுப்பினர் கோ. ஐயப்பன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பவன்குமார் ஜி. கிரியப்பனவர் ஆகியோர் உடனிருந்தனர்.

முன்னதாக, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் கட்சியினருடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பாமக சார்பில் துணைப் பொதுச் செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் தலைமையில் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.