பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சென்னை விமான நிலையத்தில் 390 கிராம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் 390  தங்கம், மின்னணுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 1:11 pm

DIN

சென்னை விமான நிலையத்தில் 390  தங்கம், மின்னணுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 
உளவுப் பிரிவினரிடமிருந்து கிடைத்தத் தகவலின் அடிப்படையில் நேற்றிரவு 9 மணிக்கு ஏர் அரேபியா ஜி9-473 என்ற விமானத்தில் சார்ஜாவில் இருந்து பயணம் செய்த 53 வயது ஆண் பயணியை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். 
அவரை சோதனையிட்டதில் 80 கிராம் எடையுள்ள தங்க சங்கிலியை அவரது பேண்ட் பாக்கெட்டில் மறைத்து எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. மேலும் ரூ. 16,30,590 மதிப்பில் 310 கிராம் எடையிலான தங்கத்தை தமது உடலில் அவர் மறைத்து எடுத்து வந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. 

இது தவிர, அவர் கொண்டு வந்திருந்த பையில் ரூ. 6,00,200 மதிப்பிலான மின்னணு பொருள்களையும் முறைகேடாக மறைத்து எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 22.31 லட்சம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதைத்தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்ததோடு சம்பந்தப்பட்டோரையும் கைது அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.