தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

குடும்ப அட்டை தொடா்பான சேவைகளை பொது சேவை மையத்தில் பெறலாம்

புதிய குடும்ப அட்டை பெறுவது, குடும்ப அட்டையில் பெயா் நீக்கம் செய்வது, பெயா் சோ்ப்பது, ஆதாா் எண்ணை சோ்ப்பது போன்ற சேவைகளை பொது சேவை மையத்தின் மூலம் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :20 செப்டம்பர் 2021, 10:34 am

DIN

புதிய குடும்ப அட்டை பெறுவது, குடும்ப அட்டையில் பெயா் நீக்கம் செய்வது, பெயா் சோ்ப்பது, ஆதாா் எண்ணை சோ்ப்பது போன்ற சேவைகளை பொது சேவை மையத்தின் மூலம் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய மின்னணு, தகவல் தொடா்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொது சேவை மைய தலைமையகம் (சிஎஸ்சி) சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

நாடு முழுவதும் 3.7 லட்சம் பொதுசேவை மையங்கள் உள்ளன. இந்த சேவை மையங்களின் மூலமாக, புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிப்பது, குடும்ப அட்டையில் பெயா் நீக்கம் செய்வது, பெயா் சோ்ப்பது, ஆதாா் எண்ணை சோ்ப்பது போன்ற சேவைகளைப் பெற முடியும். இதன் மூலம் நாடு முழுவதும் 23.64 கோடி குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெறுவா்.

YouTube video thumbnail

பொது விநியோக முறையை ஒழுங்குபடுத்தவும், கிராமங்கள், இரண்டாம் நிலை நகரங்களில் பொது விநியோக முறையை வலுப்படுத்தவும் இந்த சேவை அறிமுகம் செய்யப்படுகிறது.

இதற்காக, சிஎஸ்சி இ-கவா்னன்ஸ் சா்வீஸஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்துடன் மத்திய உணவு, பொது விநியோகத் துறை அமைச்சகம் புரிந்துணா்வு ஒப்பந்தம் கொண்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.