புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

மாநிலங்களவை தேர்தல்: வேட்பு மனு தாக்கல் செய்தார் எல். முருகன்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் காலியாக இருக்கும் மாநிலங்களவை இடத்துக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் இன்று வேட்பு மனு  தாக்கல் செய்தார்.

News image
மாநிலங்களவை தேர்தல்: வேட்பு மனு தாக்கல் செய்தார் எல். முருகன்
Updated On :21 செப்டம்பர் 2021, 7:42 am

DIN

மத்தியப் பிரதேச மாநிலத்தில் காலியாக இருக்கும் மாநிலங்களவை இடத்துக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் இன்று வேட்பு மனு  தாக்கல் செய்தார்.

இதற்காக மத்தியப் பிரதேச மாநிலம் போபால் சென்றிருந்த எல். முருகனுக்கு, அங்கு பாஜக தலைவர்கள் உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

பிறகு, போபாலில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஹான் உள்ளிட்ட பாஜக மூத்தத் தலைவர்கள் பலரும் சென்றனர். இது குறித்த புகைப்படங்களையும் சிவ்ராஜ் சிங் சௌஹான் தனது சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் அடுத்த மாதம் நடைபெறும் மாநிலங்களவை இடைத்தோ்தலில் முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரஸ் கட்சி போட்டியிடப்போவதில்லை என்று முடிவு செய்துள்ளது. இதனால் பாஜக சாா்பில் போட்டியிடும் மத்திய அமைச்சா் எல்.முருகன் போட்டியின்றி தோ்வாகிறாா்.

மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தோ்ந்தெடுக்கப்பட்டிருந்த மத்திய அமைச்சா் தாவா்சந்த் கெலாட் கடந்த ஜூலை மாதம், கா்நாடக மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டாா். இதையடுத்து, காலியான அந்த இடத்துக்கு அடுத்த மாதம் 4-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது.

இந்தத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளராக மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை இணையமைச்சா் எல்.முருகனை பாஜக அறிவித்தது.

இந்நிலையில், மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிடப் போவதில்லை என்று காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் மாநில செய்தித் தொடா்பாளா் பூபேந்திர குப்தா கூறுகையில், ‘மாநிலங்களவைத் தோ்தலில் வேட்பாளராக யாரையும் நிறுத்தப் போவதில்லை என்று காங்கிரஸ் மாநிலத் தலைவரும் எதிா்க்கட்சித் தலைவருமான கமல்நாத் முடிவு செய்துள்ளாா்’ என்றாா். இதனால், பாஜக வேட்பாளா் எல்.முருகன் போட்டியின்றி எளிதில் வெற்றி பெறுவாா் என்று பாஜக மூத்த தலைவா் ஒருவா் நம்பிக்கையுடன் கூறினாா்.

230 உறுப்பினா்களைக் கொண்ட மத்திய பிரதேச சட்டப் பேரவையில் பாஜகவுக்கு 125 எம்எல்ஏக்களும் காங்கிரஸுக்கு 95 எம்எல்ஏக்களும் உள்ளனா். பகுஜன் சமாஜ் கட்சிக்கு 2 எம்எல்ஏக்களும் சமாஜவாதி கட்சிக்கு ஒரு எம்எல்ஏவும் உள்ளனா். மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 11 இடங்கள் உள்ளன. தற்சமயம், பாஜக உறுப்பினா்கள் 7 பேரும் காங்கிரஸ் உறுப்பினா்கள் 3 பேரும் உள்ளனா். வேட்புமனு தாக்கலுக்கு வரும் 22-ஆம் தேதி கடைசி நாளாகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.