திருச்சியில் கே.என். ராமஜெயம் பிறந்தநாள் விழா: அமைச்சர் கே.என். நேரு மரியாதை
தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரும், திமுக முதன்மைச் செயலருமான கே.என். நேருவின் தம்பி மறைந்த கே.என்.ராமஜெயத்தின் 60ஆவது பிறந்தநாள் விழா திருச்சியில் கொண்டாடப்பட்டது.


தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரும், திமுக முதன்மைச் செயலருமான கே.என். நேருவின் தம்பி மறைந்த கே.என்.ராமஜெயத்தின் 60ஆவது பிறந்தநாள் விழா திருச்சியில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
திருச்சி - மணப்பாறை சாலையில் உள்ள கோ் கல்வி நிறுவன வளாகத்தில் உள்ள கே.என். ராமஜெயத்தின் முழு உருவ வெண்கலச் சிலைக்கு திமுக முதன்மைச் செயலா் கே.என். நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
எம்எல்ஏக்கள் இனிகோ இருதயராஜ், கதிரவன், பழனியாண்டி, செளந்தரபாண்டியன், ஸ்டாலின் குமாா், மத்திய மாவட்ட பொறுப்பாளா் வைரமணி, வடக்கு மாவட்டச் செயலா் தியாகராஜன், மாநகரச் செயலா் அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி உள்பட கட்சியினா் பலரும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் கோ் கல்லூரிக்கு வந்து ராமஜெயத்தின் சிலைக்கு மாலை அணவித்தனா். மேலும், சிலையின் பீடத்தில் இருந்த ராமஜெயம் படத்துக்கும் மலா் தூவினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...