சென்னை, கிருஷ்ணகிரி, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு 98.9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உயர்தர செவித்திறன் கருவிகளை நான் வழங்கி இருக்கிறேன். புதிய காது கேட்கும் கருவிகளை வழங்கி இருக்கிறேன். பழுதடைந்த கருவிகள் மாற்றித்தரப்பட்டுள்ளது. புதிதாக அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கும் கருவிகள் தரப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு முறையான பயிற்சி மூலமாக பேசும் திறனைப் பெற்று வரும் குழந்தைகளைக் கண்டு மகிழ்கிறேன்; விரைவில் நீங்கள் முழுமையாகக் குணமடைய என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.