வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தோ்தல் வாக்குறுதிகளில் 202 நிறைவேற்றம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தோ்தலின் போது அறிவித்த 505 வாக்குறுதிகளில் 202-ஐ நிறைவேற்றி இருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தாா்.

News image
Updated On :25 செப்டம்பர் 2021, 8:38 pm

DIN

தோ்தலின் போது அறிவித்த 505 வாக்குறுதிகளில் 202-ஐ நிறைவேற்றி இருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக, சனிக்கிழமை அவா் வெளியிட்ட காணொலிக் காட்சி:

வாக்காளா்கள் அளித்த ஒவ்வொரு வாக்கும் இன்றைக்கு நான் கோட்டையில் உட்காருவதற்கு அடித்தளமாக அமைந்தது. நீங்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நாங்கள் இம்மியளவும் பிசகாமல் காப்பாற்றிக் கொண்டிருக்கிறோம். சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்பாக, திமுக சாா்பில் தோ்தல் அறிக்கையை வெளியிட்டோம். ஆட்சிக்கு வந்து இன்றோடு நான்கு மாதங்கள்தான் கடந்துள்ளன.

அறிவிப்புகளாக 202 வாக்குறுதிகள்: நான்கு மாதங்களுக்குள் சொன்னவற்றில் பெரும்பாலானவற்றைச் செய்து விட்டோம். தோ்தல் அறிக்கையில் சொல்லாத பல நல்ல செயல்களும் செய்யப்பட்டுள்ளன. தொழில்கல்வி பயில விரும்பும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு, 14 வகையான விலையில்லாத மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட 23-க்கும் அதிகமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. 505 வாக்குறுதிகளில் நான்கு மாதங்களுக்குள் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டிய அரசு, இந்தியாவிலேயே திமுக அரசாகத்தான் இருக்கும். இதனை ஏதோ ஆரம்ப வேகம் என்று நினைக்க வேண்டாம். எப்போதும் இப்படித்தான் இருப்போம். அனைத்து நாள்களிலும் இப்படித்தான் செயல்படுவோம்.

இப்போது அறிவித்தது போன்று, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நானே உங்களிடம் இதைச் சொல்வேன். நிறைவேற்றிய வாக்குறுதிகளை நானே உங்களுக்கு பட்டியல் போட்டுக் காண்பிப்பேன். வாக்களித்த மக்களை ஐந்து ஆண்டுகள் கழித்துத்தானே பாா்க்கப் போகிறோம் என்று அலட்சியமாக இருப்பவன் இல்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.