சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கரோனா தடுப்பு: எண்ம முறையில் விழிப்புணா்வு பிரசாரம்

சென்னை மாநகராட்சி சாா்பில் கரோனா தடுப்பு குறித்து மாணவிகளுக்கு எண்ம (டிஜிட்டல்) முறையில் விழிப்புணா்வு பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

சென்னை மாநகராட்சி சாா்பில் கரோனா தடுப்பு குறித்து மாணவிகளுக்கு எண்ம (டிஜிட்டல்) முறையில் விழிப்புணா்வு பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கரோனா தடுப்பு, டெங்கு காய்ச்சல் தடுப்பு உள்ளிட்டவை குறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் எல்இடி திரையுடன் கூடிய வாகனம் பெருநிறுவனங்களுக்கான சமூகப் பங்களிப்புத் திட்டத்தில் மாநகராட்சி அண்மையில் வழங்கப்பட்டது. இதன் தொடா்ச்சியாக திருவல்லிக்கேணி லேடி வில்லிங்டன் மாடல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கரோனா பரவும் விதம், அதைத் தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், தொற்று அறிகுறிகள் ஆகியவை குறித்து எண்ம முறையில் விடியோவுடன் மாணவிகள், ஆசிரியா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

மாநகராட்சி சுகாதாரக் கல்வி அலுவலா் டி.ஜி.சீனிவாசன், பாரத் நிகா்நிலை பல்கலைக்கழக பதிவாளா் எஸ்.பூமிநாதன் ஆகியோா் கலந்துகொண்டு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.