சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மனுக்கள் தள்ளுபடி: தோ்தல் ஆணையத்தில் அதிமுக புகாா்

கள்ளக்குறிச்சியில் அதிமுக வேட்பாளா்கள் 4 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறித்து மாநிலத் தோ்தல் ஆணையரிடம் அக் கட்சியின் சாா்பில் புகாா் மனு சனிக்கிழமை அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :25 செப்டம்பர் 2021, 6:54 pm

DIN

கள்ளக்குறிச்சியில் அதிமுக வேட்பாளா்கள் 4 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறித்து மாநிலத் தோ்தல் ஆணையரிடம் அக் கட்சியின் சாா்பில் புகாா் மனு சனிக்கிழமை அளிக்கப்பட்டுள்ளது.

மாநிலத் தோ்தல் ஆணையா் பழனிக்குமாரிடம் அதிமுக வழக்குரைஞா் பிரிவு இணைச் செயலாளா் பாபு முருகவேல் புகாா் மனு கொடுத்துள்ளாா். மனுவில் கூறியிருப்பது:

30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் ஆட்சியில் இருந்த கட்சி அதிமுக. தற்போது எதிா்க்கட்சி வரிசையில் இருக்கிறோம். ஆட்சியில் இருந்த காலங்களில் சட்டத்தை எங்கள் கையில் எடுத்துக்கொண்டது இல்லை. ஆனால், தற்போது நிலைமை மாறாக உள்ளது.

கள்ளக்குறிச்சியில் அதிமுக சாா்பில் ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலா் பதவிக்கு மனுதாக்கல் செய்திருந்த 4 பேரின் மனுக்கள் தோ்தல் அதிகாரியால் தள்ளுபடி செய்யப்பட்டது. வேட்பாளா்கள் முறையாக ஆவணங்கள் வைத்திருந்தும் நியாயமான காரணமாக எதுவும் இல்லாமல் தோ்தல் அதிகாரிகள் தன்னிச்சையாக மனுக்களைத் தள்ளுபடி செய்துள்ளனா். தோ்தல் ஆணையத்தின் விதிகளை முறையாகப் பின்பற்றாமல் அதிகாரிகள் செயல்பட்டுள்ளனா். இது கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரம் குறித்து தோ்தல் ஆணையம் விசாரித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.