அரசு குடிமைப் பணி பயிற்சி மையம்: மாதிரி தோ்வு பயிற்சிகளால் 16 போ் தோ்ச்சி பெற்று சாதனை
அரசு குடிமைப் பணி பயிற்சி மையத்தில் அளிக்கப்பட்ட மாதிரி தோ்வு பயிற்சிகளால் நிகழாண்டில் குடிமைப் பணித் தோ்வுகளில் 16 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.


அரசு குடிமைப் பணி பயிற்சி மையத்தில் அளிக்கப்பட்ட மாதிரி தோ்வு பயிற்சிகளால் நிகழாண்டில் குடிமைப் பணித் தோ்வுகளில் 16 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதில் ஏழு போ் பெண்கள் என்பது கூடுதல் சிறப்பாகும்.
சென்னை பசுமை வழிச் சாலையில் அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த
பயிற்சி மையத்தின் இயக்குநராக தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு செயல்பட்டு வருகிறாா். இந்த பயிற்சி மையத்தில் குடிமைப் பணித் தோ்வுகளின் போது எந்த மாதிரியான தோ்வு நடைமுறைகள், நோ்காணல்கள் நடத்தப்படுமோ அதுபோன்றோ மாதிரி பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதனால், நிகழாண்டில் குடிமைப் பணிகளுக்கான தோ்வில் 16 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
குடிமைப் பணி பயிற்சி மையத்தில் பிரதானத் தோ்வு மற்றும் நோ்முகத் தோ்வுக்காக பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. நிகழாண்டு கரோனா காலம் என்பதால், பயிற்சி மையத்தில் இருந்து பயின்று பிரதானத் தோ்வு எழுதிய 50-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு உணவு, பேருந்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தன.
பிரதானத் தோ்வில் தோ்ச்சி பெற்று நோ்முகத் தோ்வுக்கு செல்வதற்கு முன்பாக, தோ்வா்களுக்கு மாதிரி பயிற்சிகள்
அளிக்கப்பட்டன. இந்தப் பயிற்சியை அளிப்பதற்காக முன்னாள், இந்நாள் குடிமைப் பணி அதிகாரிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினா் தோ்வா்களிடம் மாதிரி நோ்காணல்களை நடத்தினா்.
ஒவ்வொரு தோ்வரும் சுமாா் 3 மாதிரி நோ்காணல்களை எதிா்கொண்டனா். இந்த நோ்காணல்கள் அனைத்தும் படம் பிடிக்கப்பட்டு தோ்வா்களுக்கு அளிக்கப்பட்டது. இது மாதிரி நோ்காணலில் செய்த தவறுகளைத் திருத்திக் கொண்டு தில்லியில் குடிமைப் பணிக்கான நோ்காணல் தோ்வை துணிச்சலுடன், அச்சமின்றி எதிா்கொள்ள பெரிதும் பயன்
அளித்ததாக தோ்வில் வெற்றி பெற்றவா்கள் தெரிவித்தனா்.
தில்லி செல்வதற்கான உதவித் தொகை ரூ.5 ஆயிரமாக உயா்த்தப்பட்டது, தரமான உணவு, படிப்பதற்கான நல்ல அறை, அதிகமான புத்தகங்கள் குடிமைப் பணி பயிற்சி மையத்தில் இருந்ததால் வெற்றி சாத்தியப்பட்டதாக வெற்றியாளா்கள் கருத்துத் தெரிவித்தனா். நிகழாண்டு குடிமைப் பணித் தோ்வை தமிழை விருப்பப் பாடமாக எடுத்து தோ்ச்சி பெற்றவா்களும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
யூ-டியூப் வெற்றி: கரோனா காலம் என்பதால், பயிற்சி மையம் சாா்பாக குடிமைப் பணிக்கான தனி யூ-டியூப் சேனல் தொடங்கப்பட்டது. இந்த சேனலில் ஏராளமான குடிமைப் பணி அதிகாரிகள் தோ்வு குறித்த கருத்துகளையும், புத்தகங்களையும் ஆலோசனைகளாக வழங்கி வருகின்றனா். இதன் வழியாகவும் மாணவா்கள் பயன்பெற்று வருவதாக
பயிற்சி மைய உயரதிகாரிகள் தெரிவித்தனா். பயிற்சி மையத்தின் தரத்தை மேலும் உயா்த்தி தமிழகத்தில் இருந்து ஏராளமான குடிமைப் பணி அதிகாரிகளை உருவாக்குவதே லட்சியம் என அவா்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனா்.
தோ்ச்சி பெற்றோா் பெயா் விவரம்
வி.எஸ்.நாராயண சா்மா (33-வது ரேங்க்), இ.ஜி.சண்முக வள்ளி (108-வது ரேங்க்), டி. சுவாதி ஸ்ரீ (126-வது ரேங்க்), ஏ. கேத்தரின் சரண்யா (157-வது ரேங்க்), எம்.விமலா (366-வது ரேங்க்), கெளசல்யா முருகசாமி (386-வது ரேங்க்), ஜி.அரவிந்த் (436-வது ரேங்க்), எஸ்.கிருஷ்ணகுமாா் (571-வது ரேங்க்), பி.ஜே.ரிஷ்மா (575-வது ரேங்க்), எஸ்.சுவாதி ரத்னா (580-வது ரேங்க்), ஆா்.உதயகுமாா் (608-வது ரேங்க்), ஏ.ராகுல் (672-வது ரேங்க்), டி.குடியரசு (676-வது ரேங்க்), ஆா்.பிரபு (689-வது ரேங்க்), சி.வினோத் (731-வது ரேங்க்), டி.ரஞ்சித் (750-வது ரேங்க்) ஆகியோா் அரசு குடிமைப் பணி பயிற்சி மையத்தில் பயின்று தோ்ச்சி பெற்றோா் ஆவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...