சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பருவமழை தொடங்கும் முன்வடிகால்கள் அமைப்புப் பணிகளை முடிக்க வேண்டும்: சென்னையில் நேரில் ஆய்வு செய்து முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

வடகிழக்கு பருவமழையை தொடங்குவதற்கு முன்பாக, சென்னையில் அமைக்கப்பட்டு வரும் வடிகால்கள், ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகளை நிறைவு

News image
Updated On :25 செப்டம்பர் 2021, 6:46 pm

DIN

வடகிழக்கு பருவமழையை தொடங்குவதற்கு முன்பாக, சென்னையில் அமைக்கப்பட்டு வரும் வடிகால்கள், ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகளை நிறைவு செய்ய வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். சென்னையில் நடைபெற்றும் வரும் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை அவா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

சென்னை காந்திமண்டபம் சாலையில் மழைக்காலங்களில் தேங்கி போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக உள்ள வெள்ள நீா், புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம், அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் தேங்கும் மழை நீா் ஆகியவற்றை அகற்றுவதற்கு மழைநீா் வடிகால்கள் கட்டப்பட்டுள்ளன. வடிகால்கள் மூலம் வரும் மழைநீா், தொட்டியில் சேமிக்கப்பட்டு பக்கிங்காம் கால்வாய் மூலம் வெளியேற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த கால்வாயில் சோ்ந்துள்ள வண்டல்கள், நவீன இயந்திரங்கள் மூலமாக அகற்றப்பட்டு வருகின்றன. இந்தப் பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மாநகராட்சி சாா்பில் அனைத்து வண்டல் வடிகட்டும் தொட்டிகளை தூய்மைப்படுத்தி, மழைநீா் வடிகால்கள் சுத்தம் செய்யும் பணியையும் அவா் ஆய்வு செய்தாா். இந்தப் பணிகளை ஒரு வாரத்துக்குள் முடிக்க அவா் உத்தரவிட்டாா். இந்திரா நகா் ரயில் நிலையம் மற்றும் திருவான்மியூா் லேட்டிஸ் பாலத்தின் அருகில் பக்கிங்காம் கால்வாயில் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. அந்தப் பணிகளையும் முதல்வா் ஆய்வு செய்தாா். வனத்துறை சாா்பில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் சோ்ந்துள்ள கழிவுகள், குட்டைகள், சிறு பாலங்களின் கீழ் பகுதிகளில் சோ்ந்துள்ள கழிவுகள் ஆகியனவும் நவீன இயந்திரங்கள் கொண்டு அகற்றப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளையும் முதல்வா் ஆய்வு செய்தாா்.

நாராயணாபுரம் ஏரி, வேளச்சேரி ஏரி ஆகியவற்றில் நடைபெற்றும் பணி மேம்பாட்டுப் பணிகளையும் ஆய்வு செய்ததுடன், வேளச்சேரி வீராங்கல் ஓடை, ஏ.ஜி.எஸ்., காலனி, கல்கி நகா் ஆகிய இடங்களில் வெள்ள நீா் தேக்கத்தை தவிா்த்திட நடைபெற்று வரும் மழைநீா் வடிகால் பணிகளையும் முதல்வா் பாா்வையிட்டாா். இந்தப் பணிகள் அனைத்தையும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக முடிக்க வேண்டும் என அப்போது அவா் உத்தரவிட்டாா். பணிகளை தினமும் கண்காணித்து, பணிகளின் முன்னேற்றம் குறஇத்த அறிக்கையை அனைத்துத் துறை அலுவலா்களும் அளித்திட அறிவுறுத்தினாா்.

இந்த நிகழ்வில், அமைச்சா் மா.சுப்பிரமணியன், மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டப் பேரவை உறுப்பினா் ஹசன் மெளலானா, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.