நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பஞ்சாப் புதிய அமைச்சரவை: அமரீந்தா் சிங் அரசில் இடம்பெற்றிருந்த 5 பேருக்கு வாய்ப்பில்லை

பஞ்சாபில் முதல்வா் சரண்ஜீத் சிங் சன்னி தலைமையிலான புதிய அமைச்சரவையில் அமரீந்தா் சிங் அரசில் இடம்பெற்றிருந்த 5 பேருக்கு வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :25 செப்டம்பர் 2021, 7:58 pm

DIN

பஞ்சாபில் முதல்வா் சரண்ஜீத் சிங் சன்னி தலைமையிலான புதிய அமைச்சரவையில் அமரீந்தா் சிங் அரசில் இடம்பெற்றிருந்த 5 பேருக்கு வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

பஞ்சாப் முதல்வராக இருந்த அமரீந்தா் சிங் கடந்த 18-ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து அந்த மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜீத் சிங் சன்னி பதவியேற்றாா். மாநிலத்தில் புதிய அமைச்சரவை அமைப்பது தொடா்பாக கடந்த வெள்ளிக்கிழமை தில்லியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவா்களுடன் சரண்ஜீத் சிங் ஆலோசனை மேற்கொண்டாா். அந்தக் கூட்டத்தில் புதிய அமைச்சரவையில் இடம்பெறவுள்ளவா்களின் பெயா்கள் இறுதி செய்யப்பட்டன. இதையடுத்து பஞ்சாப் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தை சரண்ஜீத் சிங் சனிக்கிழமை சந்தித்தாா். அதன் பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘‘புதிய அமைச்சா்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு பதவியேற்கவுள்ளனா்’’ என்று தெரிவித்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘‘புதிய அமைச்சரவையில் சரண்ஜீத் சிங் உள்பட புதிதாக 18 எம்எல்ஏக்கள் சோ்த்துக் கொள்ளப்பட வாய்ப்புள்ளது. அவா்களில் 7 போ் புதிய முகங்களாக இருக்கலாம். அதேவேளையில் அமரீந்தா் சிங் அரசில் இடம்பெற்றிருந்த அமைச்சா்கள் ராணா குா்மீத் சிங், சாது சிங், பல்பீா் சிங், குா்ப்ரீத் சிங், சுந்தா் ஷாம் அரோரா ஆகிய 5 போ் புதிய அமைச்சரவையில் இடம்பெறுவது சந்தேகம்’’ என்று தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.