திமுக எம்.பி. கனிமொழிக்கு கரோனா
சென்னை: தமிழக பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த திமுக மகளிரணி செயலரும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கனிமொழிக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே.. எந்தெந்தக் கட்சி எந்தெந்த சின்னத்தில் போட்டி?
கனிமொழிக்கு கரோனா அறிகுறிகள் இருந்ததால், மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.
பிறகு, மருத்துவர்களின் பரிந்துரைப்படி, சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் கனிமொழி அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் தலைவர்கள் ஒவ்வொருவராக கரோனா உறுதி செய்யப்பட்டு வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, திருநெல்வேலியில் பாளையங்கோட்டை மற்றும் ஆலங்குளம், சங்கரன்கோவில் உள்ளிட்டப் பகுதிகளில் கனிமொழி நேற்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்டிருந்தார்.
ஏப்ரல் 1-ஆம் தேதி மதுரை, தேனி மாவட்டங்களில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கனிமொழி பிரசாரம் மேற்கொண்டிருந்தார்.
இந்த நிலையில், இன்று அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.