தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு அனுமதி வழங்கலாமா என்பது குறித்து பொதுக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடந்த 3 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்து, அரசுக்கு இலவசமாக விநியோகம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் இடைக்கால மனுதாக்கல் செய்திருந்தது.
விசாரணையில், ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க மத்திய அரசு தரப்பில் அனுமதி அளிப்பதாக மத்திய அரசின் வழக்குரைஞா் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தார்.
தமிழக அரசு தரப்பில் வெள்ளிக்கிழமை பதில் தெரிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தூத்துக்குடி மாவட்ட நிா்வாகம் சாா்பில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இன்று காலை 8 மணிக்கு பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ் தலைமையில் கருத்துக்கேட்புக் கூட்டமானது நடைபெற்று வருகிறது.
இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்படும் கருத்துகளின் அடிப்படையில் தமிழக அரசு நீதிமன்றத்தில் பதில் தெரிவிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

56 மணி நேர பேட்டரி திறனுடன் ரியல்மி பட்ஸ் டி500 புரோ!

மும்பை இந்தியன்ஸ் அணியில் மாற்று வீரராக இணைந்த இளம் பஞ்சாப் வீரர்!

தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும்: திருச்சி சிவா

ராணுவ மோதல்களால் பிரச்னைகளைத் தீர்க்க இயலாது: பிரதமர் மோடி!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


