என்ன சொல்கிறது நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை? முழு விவரம்

தமிழகத்தின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சா் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன்  தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11.30 மணிக்கு வெளியிட்டார்.
என்ன சொல்கிறது நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை; முழு விவரம்
என்ன சொல்கிறது நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை; முழு விவரம்

தமிழகத்தின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சா் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன்  தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11.30 மணிக்கு வெளியிட்டார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பின் போது, வெள்ளை அறிக்கையை வெளியிட்டு அது தொடர்பான விளக்கத்தையும் அளித்துள்ளார்.

இதற்கு முன்பாக, கடந்த 2001-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் நிதியமைச்சராக இருந்த சி.பொன்னையன், நிதிநிலை அறிக்கை தாக்கலின் போது, நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டாா். ஆனால், இப்போது பத்திரிகையாளா் சந்திப்பின் வழியே நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார்.

அந்த நிதிநிலை வெள்ளை அறிக்கை குறித்து முழுமையாக படிக்க.. கீழிருக்கும் இணைப்பை கிளிக் செய்யவும்!

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சிக் காலத்தில் திட்டங்களுக்காக செலவிடப்பட்ட தொகைகள், எந்தெந்த வழிகளில் அவை செலவிடப்பட்டன என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வெள்ளை அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. 120 பக்கங்கள் கொண்ட அறிக்கையாக அது அமைந்துள்ளது.

அவர் கூறுகையில், முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் அடிப்படையில் வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளோம். அதிமுக ஆட்சிக் காலத்தில், முதல்வரின் செயலாளர்கள் தெரிவித்த திருத்தங்களும் இடபெற்றுள்ளன.  ஆந்திரம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் வெளியிட்ட  வெள்ளை அறிக்கைகளும் ஆய்வு செய்யப்பட்டன. 2001ல் பொன்னையன் வெளியிட்ட வெள்ளை அறிக்கையையும் ஆய்வு செய்தோம். அதில் துறை ரீதியாக தகவல் எதுவும் இல்லை. தற்போது வெளியிடப்பட்டிருக்கும் வெள்ளை அறிக்கையில் துறை ரீதியாக தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.

முந்தைய திமுக ஆட்சியில் உபரி வருவாய்  என்ற நிலை இருந்தது. ஆனால், அந்த நிலை கடந்த 10 ஆண்டுகளில் மாறி, மிப்பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசுக்கு வரவேண்டிய வருமானம் பல மடங்கு சரிந்துவிட்டது. 

வெள்ளை அறிக்கையில் தவறு ஏதேனும் இருந்தால் அதுற்கு நான்தான் பொறுப்பு. அதற்காகவே வெள்ளை அறிக்கையில் எனது பெயர் இடம்பெற்றுள்ளது. மற்ற வெள்ளை அறிக்கைகளை விட தற்போதைய வெள்ளை அறிக்கை கூடுதல் தகவல்களைக் கொண்டிருக்கின்றன.

தமிழகத்தின் வருமானம் சரிந்துள்ளதை ரிசர்வ் வங்கி நிதிக் குழு சுட்டிக்காட்டியுள்ளது. கரோனாவுக்கு முன்பே தமிழகத்தின் நிதிநிலை சரியத் தொடங்கிவிட்டது. 2016 - 2021ஆம் ஆண்டு காலத்தின் அதிமுக அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.1.50 லட்சம் கோடியாக உயர்ந்தது.

கடனை வாங்கி கட்டாயச் செலவு செய்யும் வகையில் மாநிலத்தின் நிதிநிலைமை சரிந்துவிட்டது. கடந்த பத்து ஆண்டுகளில் ஏற்பட்ட வருவாய் இழப்புகள் குறித்து விரிவான விவரம் அறிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com